நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுஅபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

1. சிறுவர் கழகங்களையும், சிறுவர் சபைகளையும் தாபிக்கும் கருத்திட்டம்

இலங்கை உலக சிறுவர் சமவாயத்தில் கைச்சாத்திட்ட பின்னர் இந்நாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகமுக்கிய நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகம் செய்ய முடியும். இந்த நடவடிக்கைக் குழு 2000 ஆம் ஆண்டு சமூக சேவைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட  MSS/3/4/161 ஆம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைய தாபிக்கப்பட்டுள்ளதுடன், இத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள PCC/CRPO/11/3/4 ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம் மீண்டும் வரைவு செய்யப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவையும் உள்ளடக்கும் வகையில் தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை சகல வாய்ப்புக்களுக்குமாக இந்த நடவடிக்கைக் குழுக்கள் தாபிக்கப்பட்டன.

சிறுவர்களுக்கு வாழ்வதற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அமுல்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது குழுக்களை வலுவூட்டுவதன் மூலம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாதிரிக் கிராமம் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் சிறுவர் பங்கேட்பை விஸ்தரிப்பதற்கான சிறுவர் கழக நிகழ்ச்சித்திட்டம் மற்றும் முறையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பெறுபேறாகும்.

 

2. சிறுவர் கழகங்களையும், சிறுவர் சபைகளையும் தாபிக்கும் கருத்திட்டம்

சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 12,13,14 ஆகிய யாப்புக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பங்கேட்பு உரிமையை உறுதி செய்து சிறுவர்களை வலுவூட்டுதை பிரதான நோக்காகக் கொண்டு 2007 ஆம் ஆண்டு கிராம அலுவலர் மட்டத்தில் சிறுவர் கழகங்கள் தாபிக்கப்பட்டன. இவ்வாறு தாபிக்கப்பட்ட சிறுவர் கழகங்கள் ஊடாக சிறுவர்களின் அபிவிருத்திக்கும், திறன் விருத்திக்குமான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்களை ஒன்றிணைத்து பிரதேச சிறுவர் சபையும், பிரதேச சிறுவர் சபையின் அலுவலர்களை ஒன்றிணைத்து மாவட்ட சிறுவர் சபையும் தற்போது தாபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச சிறுவர் சபையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட சிறுவர் சபையும் தற்போது தாபிக்கப்பட்டுள்ளன. மாவட்ட சிறுவர் சபைகளை ஒன்றிணைத்து தேசிய சிறுவர் சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர் கழகங்களின் ஊடாக சிறுவர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல், சிறுவர் கழகங்களின் நூலகங்களுக்கு புத்தகங்களைப் பெற்றுக் கொடுத்தல், நல்ல பண்பாடுகளை மேம்படுத்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. 

 

3. சிறுவர் மாதிரிக் கிராமம் நிகழ்ச்சித்திட்டம்

சமுதாய அடிப்படையிலான சிறுவர் பாதுகாப்புச் செயன்முறையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட கிராமமொன்றில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு அரச அலுவலர்களின் தலையீட்டின் கீழ் மேற்படி கிராமங்களில் ஒவ்வொரு பிள்ளையினதும் அபிவிருத்தி, நிலைத்திருத்தல், பாதுகாப்பு மற்றும் பங்கேட்பு ஆகிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் வேண்டும். 

இதற்காக பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அமுல்படுத்தக்கூடிய கருத்திட்ட அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், மேற்படி தேவைகளின் அடிப்படையில் 311 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் 352 பேருக்காக ரூபா 5000.00 வீதம் ஏற்பாடுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன. 

 

4. சிறுவர் நட்புறவு நிலையங்கள்

அச்சுறுத்தல்மிக்க குடும்பச் சூழலில் தனிமைப்படுகின்ற சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்கள் தமது ஓய்வு நேரத்தை பாதுகாப்பாக கழிப்பதற்கு இந்த நிலையங்களின் ஊடாக தேவையான அரவணைப்பு வழங்கப்படும். பெற்றோர் இருவரும் தமது வீடுகளிலிருந்து வெளியேறிச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அறிவு, ஆற்றல்களை வளர்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதன் போது நூலகம், உள்ளக விளையாட்டுக்கள் மற்றும் வெளி விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கின்றது. 

 

5. விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள்

சிறுவர்கள் என்பதனால், 18 வயதுக்குக் குறைவான ஒவ்வொரு மனிதரும் கருதப்படுவர். சிறுவர்களின் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள், துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் எமது திணைக்களத்தின் முக்கிய பொறுப்பொன்றாகும். இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றி சிறுவர்களுக்கு சாதகமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக சிறுவர்களை வலுவூட்டல் வேண்டும்.

இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்காலத்தில் எழுகின்ற சிக்கல்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் சிறுவர்களின் அறிவை வளர்ப்பதற்காக பல்வேறு தலைப்புக்களின் கீழ் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அமுல்படுத்தப்படுகின்றன. இதன் போது பல்வேறு சமூகக் கட்டமைப்புக்கள் இலக்காகக் கொள்ளப்படுகின்றன. 

உதாரணமாக :-

  1. பிள்ளைகள் 
  2. பெற்றோர் மற்றும் பெரியவர்கள்
  3. பல்வேறு தொழில்வல்லுணர்கள்
  4. சமுதாயத்தினர்

இதன் மூலம் வருடாந்தம் பல்வேறு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சாதகமான அணுகுமுறையின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட தலைப்புக்களின் ஊடாக விழிப்புணர்வூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 

6. பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்தல்

அச்சுறுத்தலான நிலைமையில் காணப்படுகின்ற சிறுவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டமாக பாதுகாப்புத் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உபாயமுறையிலான முறையியல் ஒன்றாக இதன் தேவை எழுவது 2011 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் அச்சுறுத்தலான சிறுவர்களை இனங்காண்பதற்காக நடாத்தப்பட்ட ஆய்வில் பெருமளவு எண்ணிக்கையான சிறுவர்கள் இனங்காணப்பட்டதனாலாகும்.

இவ்வாறு இனங்காணப்பட்ட சிறுவர்களின் அச்சுறுத்தல் நிலைமைகள் பலதரப்பட்டவையாகும். அவர்களின் அச்சுறுத்தலான நிலைமைகளுக்கு அமைய மேற்படி அச்சுறுத்தல் நிலைமைகளைத் தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்புத் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை குறுங்கால அடிப்படையிலும், பல வருடங்கள் நீடிக்கின்ற நீண்ட கால அடிப்படையிலும் அமுல்படுத்தப்படுவதுடன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்கள் பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 

இந்தப் பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வது முதல் அமுல்படுத்தல், மதிப்பீடு செய்தல் உட்பட சகல நடவடிக்களின் போதும் பிற வெளிக்கள அலுவலர்களின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் போது தனி நபரிலும் பார்க்க கூட்டான அணுகுமுறை ஊடாக செயற்படுவதன் முக்கியத்துவமும் இதனூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வதன் மூலம் பிள்ளைக்குப் பாதுகாப்பும், அபிவிருத்தியும் கிடைப்பதுடன், குடும்பங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. குறிப்பாக சிறுவர்களின் போசணை மற்றும் அபிவிருத்திக்குத் தேவையான குடும்பங்களின் வருமான வழிமுறைகளை மேம்படுத்தல், துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் கல்வி நிலைமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றலும் கிடைத்துள்ளது. 
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 2186 065
  • pcc@sltnet.lk