நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு



சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான செயற்றிட்டம் - 2016 – 2018

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சானது சேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனத்தின் நிதி ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கருத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் செயலகத்துடன் இணைந்து சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான கருத்திட்டத்தின் பணிகளை அமுல்படுத்துவதற்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. 

சேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனமானது பிரதானமாக 4 துறைகளின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பங்கேட்பு ஆகிய உரிமைகளை இலங்கைச் சமூகத்தில் வலுவூட்டுவதற்கு இந்தக் கருத்திட்டத்தினுள் நிதிப் பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்கின்றது.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு விசேடமானதொரு பொறுப்பு 2016 ஆம் ஆண்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இந்தத் திணைக்களத்திற்கு ரூ.மி. 35.35 ஆன ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட இந்த ஏற்பாட்டுத் தொகைகள் பின்வரும் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன:

  • அச்சுறுத்தலான நிலையிலுள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வதன் மூலம் மேற்படி சிறுவர்களின் அச்சுறுத்தலான நிலைமைகளைத் தடுத்து அவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தியை உறுதிசெய்தல், இனங்காணப்பட்டுள்ள விசேடமான சிக்கல்களுக்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், அதன் கீழ் தாய்மார் வெளிநாடு செல்வதானது பிள்ளைகளின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பில் ஏற்படுத்துகின்ற தாக்கம் பற்றியும், சிறுவர்களின் பங்கேட்பு உரிமையை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்கள் சிறுவர் சபைகள் பற்றியும் 2 ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
  • சிறுவர்களின் பாதுகாப்பை வலுவூட்டுவதற்காக சமூகக் கட்டமைப்புக்களை வலுவூட்டுவதற்கு கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கான வழிகாட்டல் தொகுப்பை அச்சிட்டு இலங்கை முழுவதிலும் விநியோகித்து குழு அங்கத்தவர்களை பயிற்றுவிப்பதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர் துஷ;பிரயோகத்தைத் தடுப்பதற்காக சம்பவ முகாமைத்துவக் கொள்கையை தயார் செய்வது ஆரம்பிக்கப்பட்டதுடன், இது தற்போது இறுதிக் கட்டத்தில் காணப்படுகின்றது.
  • சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகளை பிரபல்யப்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கான விடியோ தொகுப்பொன்று தயார் செய்வதும் இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டது. .  

சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான செயற்றிட்டத்தின் மூலம் இலங்கைச் சிறுவர்களின் பாதுகாப்பு அபிவிருத்திக்காக அமுல்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர்களுக்கு மென்மேலும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு விசேட பங்களிப்பை வழங்கும் என்பது மிகவும் தெளிவான விடயமாகும்.




எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk