| சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி. சுமேதர ஜீ ஜயசேன |
![]() |
ஆணையாளர்‚ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களம் . யழனா பெரேரா |
இலங்கையில் “நன்னடத்தை சேவை” 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ‚் சம்பளம் பெறும் 10 நன்னடத்தை உத்தியோகத்தர்களை நியமித்ததன் மூலம் ஆரம்பிக்கப்படடது. அதற்கு முன்னராகவும்‚ அதாவது 1919 ஆம் ஆண்டிற்குப் பின்னர்‚ அடிக்கடி நன்னடத்தை உத்தியோகத்தர்களை‚ இலங்கை நீதிமன்றங்களில் சுயேச்சையாக ஈடுபடுத்தி நீதிமன்ற செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டது. 1944 ஆம் ஆண்டு குற்றவாளிகளை நன்னடத்தை பொறுப்பின் கீழ் வைக்கும் கட்டளைச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதுடன்‚ அதன் பிரகாரம்‚ 1950 ஆம் ஆண்டளவில் சகல மேற்பார்வை வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு‚ நன்னடக்தை முறை விரிவாக்கம் செய்யப்படடது. நன்னடத்தை முறையின் வியாபித்தலுடன்‚ 48 ஆம் இலக்க சிறுவர்‚ இளைஞர் தொடர்பான கட்டளைச்சட்டம் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைக்கு வந்தது. நன்னடத்தைச் செயற்பாடு சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் நடாத்தப்பட்டமையால் சில காலமாக சிறைச்சாலைத் திணைக்களம்‚ சிறைச்சாலை மற்றும் நன்னடத்தைத் திணைக்களமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நன்னடத்தை முறையையும் உள்வாங்கிக் கொண்டு 1956 ஆம் ஆண்டு ஓக்டோபர் 01 ஆம் திகதி “நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவை” ஆக இருந்த திணைக்களம்‚ பிறம்பான ஒரு தனித் திணைக்களமாக ஆரம்பிக்கப்பட்டது. இத் திணைக்களத்தை ஸ்தாபிக்கும் போது பின்வரும் நோக்கங்கள் இதனூடாக நிறைவேற்றிக் கொள்ள அரசு எதிர்பார்த்திருந்தது.
குற்றவாளிகள் சிறைச்சாலைக்கு தள்ளப்படுவதை மட்டுப்படுத்தி தண்டனைக்குப் பதிலாக நன்னடத்தை முறை மூலம் அவர்களை புனருத்தாபனம் செய்து நற்பிரஜைகளாக மீண்டும் சமூதாயத்தில் உள்வாங்கச் செய்தல்.
துர்நடத்தை உள்ள சிறுவர்கள்‚ இளைஞர்கள்‚ யுவதிகள் பற்றிய விசேட ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகளை எடுத்தல்.
சேவைகள் தேவைப்படும் சிறுவர்களுக்கும்ஃ வாலிபப் பருவத்தினருக்கும் சேவைகளை வழங்குதல்.
அத்தகைய சிறுவர்களுக்கு முடிந்தளவில் தமது குடும்பங்களுடன் வாழும் வாய்ப்பை வழங்குவதும்‚ பாதுகாப்பை வழங்குவதும்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்தோடு இத்திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அதிகாரங்களை மாகாண சபைகளிடம் ஒப்படைத்தன் பின்னர் இத்திணைக்களத்தின் சில பணிகள் மாகாண நன்னடத்தை ஆணையாளருக்கும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் முகங்கொடுக்கும் சட்ட ரீதியாக பிரச்சினைகள் பற்றியும் சிறுவர்களின் உரிமை மீறல்கள் தொடர்பாகப் பாதுகாப்பு தேவைப்படும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கல் பற்றியும்‚ துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களினது பாதுகாப்புப் பற்றியும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை‚ இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நன்னடத்தை அலுவலகங்கள் ஊடாகப் பெறலாம். அவ் அலுவலகங்களில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நன்னடத்தை உத்தியோகத்தர்களை சந்திப்பதன் மூலம் அல்லது எழுத்து மூலமாக அறிவிப்பதனால் அந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நன்னடத்தை அலுவலகங்களின் முகவரிகளும்‚ தொலைபேசி இலக்கங்களும்‚ மாகாண நன்னடத்தை அலுவலகங்களின் முகவரிகளும்‚ தோலைபேசி இலக்கங்களும் பின்வருமாறு:





எங்களைப் பற்றி
