|
அறிமுகம் |
![]() |
நிறுவனத்தின் நோக்கங்கள்
- அனாதையான, கைவிடப்பட்ட மற்றும் துணையற்ற சிறுவர்களின் பாதிக்கப்பட்ட உளப்பாங்கினை குணப்படுத்துவது.
- பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான‚ வேலைக்கமர்த்தப்பட்ட‚ குறைந்த வயதில் திருமணமான பிற துஷ்பிரயோக நிலைமைகளுக்கு உள்ளான‚
- வழிதவறியதும் கீழ்படிவற்றதும்‚ முரட்டுத்தன்மையும்‚ ஆக்கிரமிப்பு இயல்புடைய சிறுவர்களுக்கு உளவளத்துணை சேவையைப் பெற்றுக்கொடுத்தல்
- சமூகத்தில் சேர்ப்பதற்காக நெருக்கமான உளவிருத்தியை (ஆநவெயட புசழறவா) ஏற்படுத்தல்
- தன்நம்பிக்கையைக் (Mental Growth) கட்டியெழுப்புதல்
- வதிவிடச் சிறுவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப உளவளத் துணையை (Self Confidence) வழங்குதல்
- அசாதாரண நடத்தைக் கோலங்களை (Family Counseling) குறைத்தல்
- உணர்ச்சிவசப்பட்ட வன்முறையான நடத்தைகளைக் (Abnormal Behaviors) கட்டுப்படுத்தல்
- உணர்ச்சிவசப்பட்டஃ வன்முறையான நடத்தைகளைக் (Aggressive Behaviors) கட்டுப்படுத்தல்
- குடும்ப அலகுடன் தொடர்புகளைக் கட்டியெழுப்புதல்
- சிறுவர்களுக்கு வெளியேயுள்ள சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தல் .
- சிறுவர்களுக்கான தொழில் பயிற்சியை வழங்குதல் இதன் கீழ் தையல்‚ பின்னல்‚ கைவேலை‚ ஒப்பனைக்கலை‚ நிறந்தீட்டற் கலை போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்படும்.
- முறைசாராக் கல்வியை (Non formal Education) வழங்குதல்
- ஏழுத்தறிவு இல்லாத சிறுவர்களுக்கு விசேட கல்வி முறைகள் மூலம் அவ்வாற்றலை குறிப்பிடத் தக்க அளவுக்காயினும் பெற்றுக் கொடுத்தல்
- பாடசாலைக்குச் செல்லும் வயதிலுள்ள சிறுவர்களுக்கு பாடசாலைப் பாடத்திட்டத்தின் கீழ் கல்வியை வழங்கி‚ நிறுவனம் சார்ந்த பயிற்சிக்குப் பின்னர் பாடசாலைக்கு அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- சிறுவர்களிடத்தில் ஆன்மீக சிந்தனையை (Spiritual Development) வளர்த்தல்.
- கவின் கலைப் பாடங்களைக் கற்பித்தல்
- மனக் குழப்ப நிலைக்குச் சிகிச்சை நுட்பமுறையொன்றாக சங்கீதம்‚ நடனம்‚ சித்திரம் போன்ற பாடங்களைக் கற்பித்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
பயிற்சிக்காகச் சிறுவர்களைச் சேர்த்தல்
நிறுவனத்திற்கு சிறுவர்களைச் சேர்க்கும் போது பின்வரும் விடயங்கள் பற்றிக் கவனம் செலுத்தப்படும் .
- 18 வயதை விடக் குறைவான பெண் பிள்ளைகளாதல் வேண்டும்
- உளவளத்துணை மிகவும் அவசியமாகின்ற சிறுவர்களாதல் வேண்டும்.
- நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்படாத சிறுவர்களாயின் மிகவும் பொருத்தமானதாகும் (நீதிமன்றத்தில் வழக்கு விசாரிப்படும் சிறுவராயின் பொறுப்பாளர் சமூகமளித்து அழைத்துச் சென்று மீண்டும் திருப்பி அழைத்து வந்து ஒப்படைத்தல் வேண்டும் எனும் நிபந்தனையின் கீழ்)
- மந்த உளநிலைக்கு உட்படாத சிறுவர்களாதல் வேண்டும் .
- பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்களாயின் அவ்வாறான சிறுவர்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கே பயிற்சிக்காக சேர்த்துக் கொள்ளப்படுவர்.
நிறுவனத்திற்குச் சிறுவர்களைச் சேர்க்கும் போது அதற்காகத் தயாரிக்கப்பட்ட தகவல் பத்திரமொன்றை அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை மேம்படுத்தல் அதிகாரி ஊடாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பலாம். அல்லது மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களங்களிலும் நன்னடத்தை அலுவலகங்களிலும் இருக்கின்ற நன்னடத்தை அதிகாரிகளினூடாகவும் அனுப்ப முடியும். சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரிகளின் தகவல் பத்திரத்தை பிரதேச செயலாளர் சிபார்சு செய்திருக்க வேண்டும் என்பதுடன் நன்னடத்தை அதிகாரிகளின் தகவல் பத்திரத்தை உரிய மாகாண நன்னடத்தை ஆணையாளரினால் சிபார்சு படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
இதற்கு மேலதிகமாக.
சான்றுபடுத்தப்பட்ட பாடசாலை‚ தடுத்து வைத்தல் இல்லங்கள்‚ தொண்டர் சிறுவர் இல்லங்கள் என்பவற்றின் பொறுப்பாளர்களுக்கு தத்தமது விண்ணப்பப்படிவங்களை மாகாண ஆணையாளர் ஊடாக நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவை ஆணையாளருக்கு அனுப்புமுடியும்.
புனருத்தாபனச் செயன்முறை.
நிறுவனத்தில் சேர்க்கப்படுகின்ற சிறுவர்கள் குறைந்தது 06 மாதகாலப் பயிற்சி ஒன்றுக்கு உட்படுத்தப்படுவர். இக்காலத்தினுள் சிறுவர்களுக்கு உளவளத்துணையும் தொழில் பயிற்சியும் வழங்கப்படும். கால எல்லை தீர்மானிக்கப்படுவது‚ ஓவ்வொரு சிறுவர்களும் முகங் கொடுத்துள்ள பிரச்சினையின் அடிப்படையிலேயே ஆகும்.
நிறுவனத்தில் பயிற்சியின் முடிவில் சிறுவர்களுக்கு உரிய சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி அல்லது நன்னடத்தை அதிகாரியின் மூலம்‚ சிறுவரை சமூகத்தினுள் சேர்ப்பதற்காகத் தேவைப்படும் சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும்.
புனருத்தாபனச் செயன்முறைக்குப் பிரதானமாக பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.
- உளவளத்துணை சேவையை வழங்குதல்
- தொழில் பயிற்சி வழங்குதல்
- சமய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல்
- பொழுது போக்குச் சுற்றுலாக்களில் பங்குபற்றச் செய்தல்.
- நடனம்‚ நாடகம் போன்ற கவின் கலை நிகழ்ச்சிகளுக்காக பிற இடங்களுக்கு அழைத்துச் செல்லல்‚ வெளிச் சமூகத்துடன் தொடர்புகளை எற்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல்‚ (சந்தைகளுக்கு அழைத்துச் செல்லல்‚ தபால் அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லல்.)
- வெளி விரிவுரையாளர்களை அழைத்து உளவளத்துணை மற்றும் தொழில் பயிற்சிக்குரிய வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துதல்.
- நிறுவனத்தினுள் சிறுவர்களுக்கு சுகந்திரமாகவும்‚ நட்புடனும் காலத்தைச் செலவிடுவதற்கு வாய்பை வழங்குல்.
- மாணவ சங்கங்கள்‚ காலைக் கூட்டங்கள் மூலம் சிறுவர்களுக்குத் தமது திறன்களை வெளியே கொண்டு வருவதற்கு வாய்ப்பளித்தல்.
நிறுவனத்தினூடாகக் கிடைக்கும் அனுகூலங்களும் பயன்களும்
- உளவளத்துணையைப் பெறுவதால் மன அழுத்தம் குறைவடைதலும் சமூகமயப்படுத்தப்படுதலும்
- அரச மற்றும் தொண்டர் சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது‚ குறைவடைதல்.
- சட்டரீதியான தடைகள் இல்லாத சிறுவர்களை துரிதமாக இல்லங்களில் ஒப்படைப்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுதல்.
- பெற்றோர் இல்லாத சிறுவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரிடம் அல்லது பாதுகாவலர் ஒருவரிடம் பிள்ளையை ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- பிள்ளையை சமூகத்துடன் சேர்ப்பதற்கான சூழல் உரிய பாதுகாப்புடையது என உறுதிப்படுத்த முடியுமாதல்.
- இங்கு பிள்ளையை சமுகத்துடன் சேர்ப்பதற்கு முன்னர் உரிய சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரியிடமேர அல்லது நன்னடத்தை அதிகாரியிடமேர இது தொடர்பாக விசாரித்து அறியப்படும்
- தொழில் பயிற்சியின் இறுதியில் அந்தந்த துறைகளுக்குத் தேவையான மூலப் பொருள் தொகுதி ஒன்றைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஒவ்வொரு சிறுவரினதும் ஆற்றல்களுக்கு ஏற்ப தொழில்களில் ஈடுபடுத்துதல்.
- எழுத்தறிவாற்றலை விருத்தி செய்தல்
- இடை நிறுத்தப்பட்டிருந்த முறைசார்ந்த கல்வியை மீண்டும் பெறுவதற்காக பாடசாலைக்குச் செல்லக் கூடிய வயதில் உள்ள சிறுவர்களுக்கு பாடசலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தல்.
- அன்றாட வீட்டு வேலைகள் பற்றி செயன்முறைப் பயிற்சியை பெற்றுக்கொள்ள முடியுமாதல்.
நிறுவனத்திலிருந்து வெளியேறிச் சென்ற சிறுவர்களின் தற்போதைய நிலை
|
எண்ணிக்கை
|
நூற்றுவீதம்
|
|
| பாடசாலைக்குச் செல்லல் |
22
|
14%
|
| பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புடன் வீட்டில் இருத்தல் |
57
|
35%
|
| தொழில்களில் ஈடுபட்டிருத்தல் |
38
|
24%
|
| தொடர்ந்தும் நிறுவனப் பராமரிப்பில் இருத்தல் |
14
|
9%
|
| திருமனம் செய்திருத்தல் |
23
|
14%
|
| ஏனையவை |
06
|
4%
|
| மொத்தம் |
160
|
பிற்பட்ட விபரம் தேடல் (flow up) நடவடிக்கைகளினால் வெளியாகின்ற காலத்துடன் மாற்றமடையும்
சிறுவர் பயிற்சி உளவளத்துணை சேவை நிலையம்
| இலக்கம் : 176/104 , கல்கணுவை வீதி‚ கொரகானை, மொரட்டுவ. |
||
| தொலை பேசி இலக்கம் | : | +9438 229 7353/+9411 555 9228 |
| தொலை நகல் | : | +9411 555 9228 |
| மின்னஞ்சல் | : | இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் |
| திசை | : | பாதை வரைபடம் சிறுவர் பயிற்சி உளவளத்துணை தேசிய நிலையம் |

|
Province |
Address |
Tel No. |
Fax |
|
Western province |
Department of Probation and Child Care Services, No. 204,densil Kobbakaduwa MW. Baththaramulla. | 4413162 4413371 071-3099571 |
4413372 286548 |
|
Southern province |
Department of Probation and Child Care Services, Kithulampitiya,Galle | 091-2234156 091-2248259 091-2226573AO |
091-2226573 |
|
Northern province |
Department of Probation and Child Care Services,agriculture Building Complex,Kanniya Road, Varothayanager,Trincomalee | 0602202421 060-2265464 026-2226951 |
026-2226951 |
|
Sabaragamuwa province |
Department of Probation and Child Care Services,New Towm ,Rathnapura | 0454-2231222 045-2226912 |
045-2231222 |
|
Eastern province |
Department of Probation and Child Care Services, Inner Habour Road,Trincomalee | 026-2222733 Gen-060-22200211 |
026-2222733 |
|
North Western province |
Department of Probation and Child Care Services, Agriculture building,No.02, Dambulla Road, Kurunegala | 037-4932030 Gen-037-2224796 |
037-4932030 |
|
Central Province |
Department of Probation and Child Care Services,Kandy | 060-282462 Gen-081-2223528 |
081-2223528 |
|
North central Province |
Department of Probation and Child Care Services,K.B. Rathnayaka MW., Anuradhapura | 025-2222570 071-80006792 |
025-222570 |
|
UVA |
Department of Probation and Child Care Services, R.H.Gunawardana MW.Badulle | 055-3550470 055-2231209 |
22220008 |





கருத்தரங்கு நிலையங்கள்
