நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுFAQ

01.உள்நாட்டில் பிள்ளையை மகவேற்பு செய்யும் போது பின்பற்ற வேண்டிய செயலொழுங்குவிதிகள் எவை ?

விண்ணப்பதாரிகள் வசிக்கும் மாகாணத்தின் மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்துக்கு அனுப்புதல்.


02.வெளிநாட்டு ரீதியில் பிள்ளையை மகவேற்பு செய்யும் போது பின்பற்ற வேண்டிய செயலொழுங்குவிதிகள் எவை ?

பின்வரும் இணைப்பின் மூலம் உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளுதல்.

http://www.probation.gov.lk/prodationpage_e.php?id=29


03.வெளிநாட்டு மகவேற்புக்காக வழங்கப்பட்டுள்ள பிள்ளையின் இயற்கை பெற்றோரை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் ?

விண்ணப்பதாரியால் அனுப்பப்பட்ட விண்ணப்பம் மற்றும் தகவல்களுக்கு அமைய திணைக்கள ஆவணக் காப்பகத்தில் தற்போதுள்ள அறிக்கைகள், உரிய மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள அறிக்கை, பிறப்பை உறுதி செய்வதற்கான மருத்துவமனை அறிக்கை, தாய் வசித்து வந்தமை உறுதி செய்யப்பட்டால் அது தொடர்பான பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாடுத்தல் அலுவலரின் அறிக்கை, சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை எனின் சிறுவர் இல்ல நிர்வாகியின் அறிக்கை கோருதல். அந்த அறிக்கைகளில் உள்ள தகவல்களுக்கு அமைய இயற்கையான தாயை கண்டுபிடிக்கும் இயலுமை அல்லது இயலாமை தொடர்பில் விண்ணப்பதாரிகளை தெளிவூட்டுதல்.
 
  
04.மகவேற்புக்கு செய்ய சிரமமான பிள்ளைகளை (அங்கவீனமுற்ற நிலையிலுள்ள பிள்ளைகள்) பொறுப்பேற்கும் முறைமை உள்ளதா ?

உரிய மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் இவ்வாறு அங்கவீனமுற்ற பிள்ளைகளை பொறுப்பேற்றல் மற்றும் வதிவிட பாதுகாப்பு மேற்கொள்ளப்படுகிறது. உங்களுக்குரிய மாகாணத்தின் நன்நடத்தை திணைக்களத்தை அணுகுங்கள். 


05.உரிய பாதுகாப்பு மற்றும் கல்வி பெறாத பிள்ளைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் அல்லது சிக்கல் நிலையிலுள்ள பிள்ளைகள் தொடர்பான முறைப்பாடுகளை யாருக்கு அனுப்ப வேண்டும். ?

இவ்வாறான பிள்ளைகள் தொடர்பில் சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் அலுவலர் ஃ உதவியாளர், ஸ்ரீலங்கா பொலீஸ் ஃ சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், சிறுவர் மற்றும் பெண்கள் அலகு, பிரதேச செயலகம் அல்லது உங்களது பிரதேசத்துக்கு உரிய நன்னடத்தை அலுவலரை அணுகுங்கள். 


06.பிள்ளைளை எவ்வாறு சிறுவர் இல்லத்தில் இணைப்பது ? 
இறுதி மாற்றுத் தெரிவாக சிறுவர் இல்லத்தில் இணைத்தல் மேற்கொள்ளப்படுகிறது. சிறுவர் இல்லங்கள் தொடர்பாகவும், சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் இணைத்தல் தொடர்பான செயற்பாடுகள் உரிய மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகிறது. உங்களது பிரதேசத்துக்கு உரிய நன்நடத்தை அலுவலகத்தில் இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.


07.போதைப்பொருளுக்கு  அடிமையான பிள்ளைகள் யாரிடம் அனுப்பப்படுகிறார்கள் ?

போதைப்பொருள் தடுப்பு அலுவலர், பிரதேச செயலகம் சமூக சேவை அலுவலர் ஃ உளவளத்துணை அலுவலர், பொலீஸ் ஃ சமூர்த்தி பிரிவின் சமூக அபிவிருத்தி அலுவலர் அல்லது சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் அலுவலர் ஃ உதவி அலுவலரை அணுகி தேவையான உதவி ஃ சேவைகளைப் பெறலாம். 


08.அச்சுறுத்தல் நிலையிலுள்ள பிள்ளைக்கான உதவியை எவ்வாறு பெறலாம் ?
சிறுவர் உரிமைகள் மேம்படுத்தல் அலுவலர்கள் ஃ உதவியாளருடன் (பிரதேச செயலகம்) தொடர்புகொண்டு பிள்ளையின் தேவையை தெளிவுபடுத்தி தற்போதுள்ள உதவித் திட்டங்களின் கீழ் நன்மைகளை பெறுவதற்கு தேவையான விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான ஆவணங்களை பிரதேச செயலகங்கள் மூலம் சமர்ப்பித்தல். 


09.பொருளாதார நெருக்கடியுள்ள பிள்ளைக்கு அனுசரணை வழங்க ஃ உதவி செய்வதற்கான வாய்ப்புகள் எவை ? 

அத்வெல அல்லது செவனசரண உதவி திட்டங்கள் மூலம் தெரிவுசெய்யப்படும் பிள்ளைகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. 


10.சிறுவர் அபிவிருத்தி நிலைய பிள்ளைகளுக்கு அனுசரணை வழங்குவதற்கு எவ்வாறு நிலையங்கள் தெரிவு செய்யப்படுகின்றன ?

மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மூலம் சிறுவர் இல்லங்கள் தொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk