நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்

மகளிர்இ சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சுஅபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள்

1. சிறுவர் கழகங்களையும், சிறுவர் சபைகளையும் தாபிக்கும் கருத்திட்டம்

1989 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தில் இலங்கை 1991 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டது. அதன் விளைவாக, இலங்கை சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை இலங்கைக் கொள்கை சட்டகத்தினுள் உள்வாங்கும் நோக்கில் அதற்கமைவாக இலங்கையில் சிறுவர் உரிமைகள் சமவாயம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது சிறுவர் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்குரிய பங்களிப்பு வழங்கும் கொள்கை ஆவணமாகும். குறிப்பிடப்பட்ட பிரிவு 40 இன் படி 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நாட்டின் தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராமிய மட்டங்களில் சிறுவர் பாதுகாப்பு செயற்பாட்டுக் குழு அமைப்பு செயற்படுகின்றது. இதுவரைக்கும் இந்த குழு 2018.01.10 ஆம் திகதி இலக்கம் 1Æ2018 சுற்றறிக்கையின் படி செயற்படுகின்றது.

கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழு

கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் ஆபத்திலுள்ள சிறுவர்களை அடையாளம் காணுதல் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்தல் Æஅறிக்கையிடுதல்

பிரதேச செயற்பாட்டுக் குழு

கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவினூடாக அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளை கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பிரதேச செயற்பாட்டுக் குழுவிற்கு அனுப்பி தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல், தீர்வுக்கான பரிந்துரை செய்தல் மற்றும் அறிவித்தல்

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு

பிரதேச செயற்பாட்டுக் குழுவினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுத்துதல், தீர்வுக்கான பரிந்துரை செய்தல் மற்றும் அறிவித்தல்

மாகாண சிறுவர் அபிவிருத்தி குழு

மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுத்துதல், தீர்வுக்கான பரிந்துரை செய்தல் மற்றும் அறிவித்தல்

தேசிய சிறுவர் அபிவிருத்தி குழு

• மாகாண சிறுவர் அபிவிருத்தி குழுவினால் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக பல பங்குதரர் நிறுவனங்கள்Æ அமைச்சினூடாக அடையாளம் காணுதல் மற்றும் அறிவித்தல்.

• உரிய அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து சர்வதேச சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கு அமைவாக சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துதல்

• சிறுவர்கள் தொடர்பாக கிராமிய மட்டத்தில் இருந்து பிரதேச, மாவட்ட மட்டம் வரை தலையிடு செய்தல்

• தேசிய மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கொள்கையடிப்படையில் தீர்மானம் எடுத்தல்

இதன் மூலம், சிறுவர்களுக்கு எதிரான எதிர்மறைமுகமான பாதிப்புகளைக் குறைத்து சிறந்த சமூக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக ஒரு சமூக சூழலை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

2. சிறுவர் கழகங்களையும், சிறுவர் சபைகளையும் தாபிக்கும் கருத்திட்டம்

சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 12, 13, 14 ஏற்பாடுகளின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள சிறுவர்கள் பங்குபற்றுவதற்கான உரிமையினை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை வலுவூட்டுமு; நோக்கில் 2007 ம் ஆண்டு தொடக்கம் கிராம சேவகர் பிரிவுகள் சிறுவர் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழகங்களை ஒன்றிணைத்து பிதேச சிறுவர் சபைகள், பிரதேச சிறுவர் சபையின் நிர்வாக குழுக்கள் ஒன்றினைந்து மாவட்ட சிறுவர் சபைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சிறுவர் சபைகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட சிறுவர் சபைகள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட சிறுவர் சபைகள் ஒன்றினைந்து தேசிய சிறுவர் சபையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிறுவர் சபைகள் ஊடாக பிள்ளைகளின் திறன்களை அபிவிருத்;தி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்துதல், சிறுவர் சபைகளின் நூல்நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்குதல், நல்லொழுங்களை விருத்தியடையச் செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறுவர் சபைகளை பதிவு செய்வதற்கான நடவடிக்கைள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ப்படுகின்றது. கிராமய மட்டங்களில் சிறுவர் சபைகளுடன் தொடர்புடைய சிறுவர்கள் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறுவர் சபையினை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், கிராமிய சிறுவர் கழகங்களில் இருந்து ஆரம்பித்து அடுத்தபடியாக பிரதேச சிறுவர் ஆகவும், மாவட்ட சிறுவர் கழகங்கள் மற்றும் தேசிய சிறுவர் கழகம் வரை பயனிக்கின்றது. அதன் அடிப்படையில் கிராமிய மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் கழங்களை தலைமைதாங்குகின்ற சிறுவர்கள் பிரதேச சிறுவர் கழகங்களில், பிரதேச மட்டத்தில் நிர்வாகிகளான சிறுவர்கள் மாவட்ட சிறுவர் கழகம் மற்றும் அதனுள் பதவிநிலையிலுள்ள சிறுவர்கள் தேசிய சிறுவர் கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிறுவர் கழகங்கள், சிறுவர் சபைகளிலுள்ள சிறுவர்களின் அறிவு, மனப்பாங்கு ,திறன்கள் என்பவற்றினை அபிவிருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்துவதுடன், சர்வதேச மாநாடுகளில் பிரதிநிதியாக பங்குபற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பங்குபற்றுவதற்கு சிறுவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

3. சிறுவர் மாதிரிக் கிராமம் நிகழ்ச்சித்திட்டம்

சமுதாய அடிப்படையிலான சிறுவர் பாதுகாப்புச் செயன்முறையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட கிராமமொன்றில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு அரச அலுவலர்களின் தலையீட்டின் கீழ் மேற்படி கிராமங்களில் ஒவ்வொரு பிள்ளையினதும் அபிவிருத்தி, நிலைத்திருத்தல், பாதுகாப்பு மற்றும் பங்கேட்பு ஆகிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல் வேண்டும். 

இதற்காக பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அமுல்படுத்தக்கூடிய கருத்திட்ட அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், மேற்படி தேவைகளின் அடிப்படையில் 311 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் 352 பேருக்காக ரூபா 5000.00 வீதம் ஏற்பாடுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன. 

 

4. சிறுவர் நட்புறவு நிலையங்கள்

அச்சுறுத்தல்மிக்க குடும்பச் சூழலில் தனிமைப்படுகின்ற சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்கள் தமது ஓய்வு நேரத்தை பாதுகாப்பாக கழிப்பதற்கு இந்த நிலையங்களின் ஊடாக தேவையான அரவணைப்பு வழங்கப்படும். பெற்றோர் இருவரும் தமது வீடுகளிலிருந்து வெளியேறிச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் அறிவு, ஆற்றல்களை வளர்ப்பதற்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும். இதன் போது நூலகம், உள்ளக விளையாட்டுக்கள் மற்றும் வெளி விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைக்கின்றது. 

 

5. விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள்

சிறுவர்கள் என்பதனால், 18 வயதுக்குக் குறைவான ஒவ்வொரு மனிதரும் கருதப்படுவர். சிறுவர்களின் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற வன்முறைகள், துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் எமது திணைக்களத்தின் முக்கிய பொறுப்பொன்றாகும். இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றி சிறுவர்களுக்கு சாதகமான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக சிறுவர்களை வலுவூட்டல் வேண்டும்.

இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்காலத்தில் எழுகின்ற சிக்கல்களைக் குறைத்துக்கொள்ளல் மற்றும் சிறுவர்களின் அறிவை வளர்ப்பதற்காக பல்வேறு தலைப்புக்களின் கீழ் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் அமுல்படுத்தப்படுகின்றன. இதன் போது பல்வேறு சமூகக் கட்டமைப்புக்கள் இலக்காகக் கொள்ளப்படுகின்றன. 

உதாரணமாக :-

  1. பிள்ளைகள் 
  2. பெற்றோர் மற்றும் பெரியவர்கள்
  3. பல்வேறு தொழில்வல்லுணர்கள்
  4. சமுதாயத்தினர்

இதன் மூலம் வருடாந்தம் பல்வேறு சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சாதகமான அணுகுமுறையின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட தலைப்புக்களின் ஊடாக விழிப்புணர்வூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 

6. பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்தல்

அச்சுறுத்தலான நிலைமையில் காணப்படுகின்ற சிறுவர்களுக்கு நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டமாக பாதுகாப்புத் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உபாயமுறையிலான முறையியல் ஒன்றாக இதன் தேவை எழுவது 2011 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் அச்சுறுத்தலான சிறுவர்களை இனங்காண்பதற்காக நடாத்தப்பட்ட ஆய்வில் பெருமளவு எண்ணிக்கையான சிறுவர்கள் இனங்காணப்பட்டதனாலாகும்.

இவ்வாறு இனங்காணப்பட்ட சிறுவர்களின் அச்சுறுத்தல் நிலைமைகள் பலதரப்பட்டவையாகும். அவர்களின் அச்சுறுத்தலான நிலைமைகளுக்கு அமைய மேற்படி அச்சுறுத்தல் நிலைமைகளைத் தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்புத் திட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. இவை குறுங்கால அடிப்படையிலும், பல வருடங்கள் நீடிக்கின்ற நீண்ட கால அடிப்படையிலும் அமுல்படுத்தப்படுவதுடன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர்கள் பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 

இந்தப் பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வது முதல் அமுல்படுத்தல், மதிப்பீடு செய்தல் உட்பட சகல நடவடிக்களின் போதும் பிற வெளிக்கள அலுவலர்களின் உதவியும் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் போது தனி நபரிலும் பார்க்க கூட்டான அணுகுமுறை ஊடாக செயற்படுவதன் முக்கியத்துவமும் இதனூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி பாதுகாப்புத் திட்டங்களைத் தயார் செய்வதன் மூலம் பிள்ளைக்குப் பாதுகாப்பும், அபிவிருத்தியும் கிடைப்பதுடன், குடும்பங்களும் கட்டியெழுப்பப்படுகின்றன. குறிப்பாக சிறுவர்களின் போசணை மற்றும் அபிவிருத்திக்குத் தேவையான குடும்பங்களின் வருமான வழிமுறைகளை மேம்படுத்தல், துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் கல்வி நிலைமைகளை மேம்படுத்தத் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றலும் கிடைத்துள்ளது. 

 

7. சிறுவர்களை மையமாக கொண்ட அனர்தங்களை குறைப்பதற்கான நிகழ்ச்சிதிட்டம்

அனர்த்தங்கள், விபத்துக்கள் மற்றும் ஆபத்துக்களுக்கு உள்ளாகி மிகவும் பாதிக்கப்பட்டவர்களிடையே சிறுவர்களும் பிரதான இடத்தில் உள்ளனர். இதுபோன்ற சந்தரப்;பங்களில் பிரதானமாக பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் முக்கியமாக பாதிக்கப்படும் சிறுவர்களுக்கான சந்தர்ப்பங்களை முன்கூட்டியே அடையாளம் காணுதல், முன்கூட்டியே தயார் செய்வது, அதன் பிரகாரம் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான திறன்களை வளர்துக்கொள்வது, அத்தகைய சந்தர்ப்பங்களில் அதனை தாங்கும் பலத்தினை வழங்குவது கட்டாயமாகும். இந்த அறிவு, திறன்கள், மனப்பாங்கு என்பவற்றை வௌ;வேறு செயற்பாடுகளினூடாக வழங்குவதற்கு சிறுவர்களை மையமாக கொண்டு இதற்கான செயற்றிட்டங்களை அடையாளம் கண்டு அமுல்படுத்துவதும் இதன்கீழ் நடைபெறும். அங்கு சிறுவர்கள் அனர்த்தம்,விபத்து,ஆபத்து போன்றவற்றால் மட்டும் பாதிக்கப்படாமல் சமூக ஆர்வலர்களாகின்றனர்

 

8. சிறுவர்களை அடிப்படையாக கொண்ட ஆய்வு

சிறுவர்கள் சமூகத்தின் பிரதான பிரிவாக உள்ளனர். சிறுவர்கள் அடிப்படையிலான ஆய்வுமூலம் அவர்கள் சமூகத்தினை அறிந்து கொள்கின்றனர். சிறுவர் ஆய்வாளர் ஒருவராக சிறுவர்களை பாதிக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து செயற்றிட்டமென்றினை தயாரித்து அவற்றினை செயற்படுத்துவதன் ஊடாக சிறுவர்கள் மீண்டும் மாற்றமடைகின்றார்கள். அவ்வாறே பிரச்சனைகளை தனித்தனியாக பேசுவதற்கு பதிலாக ,து தொடர்பாக விஞ்ஞானபூர்வமான ஆய்வினை மேற்கொள்வதற்கு சிறுவர்களை ஊக்குவித்தல் ,ந்த நிகழ்ச்சிதிட்டத்தின் மூலம் ,டம்பெறும். சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை சிறுவர்களுடாகவே அடையாளம் காணுதல், தீர்வுகளுக்கான ஆலோசனைகளை முன்வைத்தல் மற்றும் அமுல்படுத்துவதற்குப் பொருத்தமான சிறுவர்கள் பங்குபற்றுவதற்கு தேவையான வாய்ப்புக்களை வழங்குவதுடன் சிறுவர் உரிமைகள் சமவாயத்துடன் தொடர்பான உடன்படிக்கையில் கையொப்பமிட்டநாடு என்றவகையில் அதன் 12வது யாப்பினை யாதார்தமுள்ளதாக ஆக்குவதற்கான அவசியம் ஏற்படும்.
எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்

எம்மைத் தொடர்புகொள்ள

  • நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,
  • 3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,
  • பத்தரமுல்லை.
  • +94 11 2186 062/ 11 3082 483
  • +94 11 218 7285
  • pcc@sltnet.lk